ஜகத்தினை மாற்றிடுவோம்

ஜகத்தினை மாற்றிடுவோம்
    வாழ்வில் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.ஒரு வீட்டின் முன்னேற்றம் அந்த வீட்டுத்தலைவனின் நடத்தையினால் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு நாட்டின் முன்னேற்றம் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.அப்போது இந்த ஜகத்தின் வெற்றி ஒவ்வொரு நாட்டின்  முன்னேற்றத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்'என்கிறார் பாரதி.ஆனால் தற்போது விவசாயிகளே உணவில்லாமல் துன்பப்படுகின்றனர்.இந்தியாவில் 2014ம் ஆண்டு 2115 விவசாயிகளும்,2015ம் ஆண்டு 2997விவசாயிகளும் இறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளவிவசாயிகளின் துன்பம் ஒரு பக்கம் என்றால் பெண்களுக்கு நடக்கும் கொடுமை மறுப்பக்கம்.இருப்பினும் பல தடைகளைத் தாண்டி இன்றும் பல.சாதனைப் பெண்மணிகள் உள்ளனர்.இருந்தும் இன்று வரை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லை. பெண்களுக்கு என பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் பெண்களின் சுதந்திரம் உறுதிசெய்யப்படாத ஒன்றாய் உள்ளது.
"ஜகத்தின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில்
நாட்டின் முன்னேற்றம் ஒரு வீட்டின் முன்னேற்றத்தில்
வீட்டின் முன்னேற்றம் தனிமனிதனின்
முன்னேற்றத்தில்".
   ஆகவே,ஒவ்வொருவரும் நம் வாழ்வை உயர்த்தி இந்த ஜகத்தின் மாற்றத்திற்கு வழிவகுப்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை