சாலையில் ஒரு சோலை

சாலையில் ஒரு சோலை
காலையில் ஒரு வேலை-அது
கல்லூரி செல்வது
கல்லூரிக்கு ஒரு பயணம்-அது
பேருந்தில் செல்வது
பேருந்தில் ஒரு அழகு-அது
இயற்கையை இரசிப்பது
இயற்கையில் ஒரு இனிமை-அது
இன்பம் தருவது
இன்பத்தில் ஒரு புதுமை-அது
சோலைகள் தருவது
சாலையில் சோலை-அது
கடவுள் அளித்தது
கடவுளின் இன்பம்-அது
பசுமை காண்பது
பசுமையின் இன்பம்-அது
சுற்றுச்சூழல் காப்பது
சுற்றுச்சூழலின் இன்பம்-அது
சோலை காப்பது
சாலையின் இன்பம்-அது
சோலை காப்பது
சாதனையின் அழகு சோதனையில்
சந்திரனின் அழகு மாலையில்
சாலையின் அழகு சோலையில்
     சாலையில் ஒரு சோலை!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை