என் வறண்ட காவிரி

என் வறண்ட காவிரி
தலைக்காவிரியில் கையளவு உருவாகி
பெங்களூர் வழியாக தமிழகம் புகுந்து
ஒகேனக்கல்லில் ஆர்பரித்து
விரிகுடாவில் சங்கமமாகும் காவிரி தாயே!
நீயோ இந்தியாவிலுள்ள பெரிய ஆறுகளில் ஒருவள்
உனக்கோ பல துணை ஆறுகள்
உன்னால் தான் சோழநாடு செழிப்புற்றது
எட்டுத்தொகையும் திருக்குறளும் உன் புகழ் பரப்பியது
எங்கே சென்றாள் என் பொன்னி தாய்
அவள் கொடுத்த பாதை மட்டுமுள்ளது
அவள் எங்கே
உன்னைப் பார்த்து வளர்ந்த நாங்கள்
உன்னோடு விளையாடி மகிழ்ந்த நாங்கள்
இப்போது உன்னைக் காணாமல் தவிக்கிறோம்
வான் தந்த மழைநீரை தேக்க மறந்தோம்
நித்தம் உன்னை எதிர்பார்த்து வாடினேன்
நாளைய தலைமுறைக்கு எதை அளிக்க
போகிறோம்
நாளையை எப்படி சமாளிக்கப் போகிறோம்
வந்த வழியை மறந்தோம்
போகும் வழி அறியாமல் நின்றோம்
வழி தெரியாமல் கையேந்தி நிற்கிறது என் தேசம்
விடைதெரியாமல் கேள்விகளோடு வாழ்க்கை என் நெஞ்சம்
என் வறண்ட காவிரியே!என்னைத் தேடி வா!
தேசம் முழுவதும் செழிப்பு சேர்க்க வா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை