ஆணும் பெண்ணும் நிகரென கொள்வோம்

ஆணும் பெண்ணும் நிகரென கொள்வோம்

ஆணைப் படைத்தவன் இறைவன் என்றால்
  பெண்ணைப் படைத்தவன் ஆணா?-     இல்லை
பெண்ணையும் இறைவன் தான்   படைத்தானா?
அப்படி இறைவன் என்றால்-ஏன்
பெண் மட்டும் ஆணுக்குக் கீழ்
காரணம் என்னவோ? இறைவா
ஆணுக்கு முடிவெடுக்கும் திறமை   
உண்டென்றால்
பெண்ணிற்கு இல்லையா?
பெண்ணிற்கு மட்டும் தான் கற்புண்டா?
  ஆணிற்கு இல்லையா?
அவளுக்கும் விருப்பு வெறுப்பு     இருக்காதா?
இல்லை இருக்கக் கூடாதா?-இந்த
  ஏற்றத்தாழ்விற்குக் காரணம்     என்னவோ?
காரணத்தையே அறிய விளைகிறது
 நெஞ்சம்
ஆணிற்கு உள்ள பலமானது
  பெண்ணைக் காக்கவா?அழிக்கவா?
கற்பு என்னும் மூன்றெழுத்தினுள்
  அவளை அடக்குவது ஏன்?
கற்பு என்னும் பெயரை உருவாக்கியவன்
  அதை எதிர்பார்ப்பது பெண்ணிடம்
 மட்டும் தானா?
அது ஏன் இறைவா!ஏன்?
   பெண்ணை மதிக்கும் சமுதாயம்
  உருவாகுமா?
உருவாகிக் கொண்டு தான் இருக்கிறது
 என்றால்
சிறுமிகளின் பாலியல் துன்புறுத்தலும்
  இருக்கிறதல்லவா?
இந்த அனைத்து கொடுமைகளும்
  இல்லாமல்
ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்
  இல்லாமல்
ஆணும் பெண்ணும் நிகரென
  கொள்வோம்
சமுதாயத்தில் நிம்மதி காப்போம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை