இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐம்பெருங்காப்பியங்களின் கதைச்சுருக்கம்

படம்
சிலப்பதிகாரம்      *  புகார்க்காண்டம் - 10 காதைகள்      * மதுரைக்காண்டம் - 13 காதைகள்      * வஞ்சிக்காண்டம் - 7 காதைகள்    மூவேந்தர்களின் நாடுகளையும் மூவேந்தர்களின் சிறப்புகளையும் ஏற்றத்தாழ்வின்றி சிறப்பிக்கப்படும் காப்பியம். சோழ நாட்டு புகாரில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டு வஞ்சி மாநகரில் கணவனுடன் இணைந்து வானவர் தொழுதேத்தும் மதுரையில் கணவனைப் பறிகொடுத்து பத்தினி தெய்வமாக மாறுகிறாள். மணிமேகலை      மணிமேகலை 30 காதைகளைக் கொண்டு உள்ளது. இக்காப்பியத்தை மணிமேகலை துறவு,அறகாப்பியம் என்றும் அழைப்பர். சிறைசீீீர்த்திருத்தம்,பறந்தமை ஒழிப்பு,பசிப்பிணிஅகற்றல், உடல் ஊனமுற்றவருக்கு உதவுதல், மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு என சமுதாய சீர்த்திருத்த காப்பியமாக விளங்குகிறது.      சோழ நாட்டின் இளவரசன் உதய குமரன் மணிமேகலையை விரும்புகிறான். தீபத்திலகை தெய்வத்திடம் அட்சயப்பாத்திரம் எனும் அமுத சுரபியை மணிமேகலை பெறுகிறாள். பூம்புகார் நகர மக்களுக்கு உணவளித்தாள்.        மணிமேகலையை உதயகுமரன் பின் தொடர காய சண்டிகை வடிவில் மணிமேகலை தொண்டு செய்தாள். இதனை அறிந்த உதயகுமரன் மீண்டும் தொடர்ந்தான். காய சண்டிகையை தேடி வந

மூளைக்கு வேலை

படம்
1.X என்பவர் y- ன் சகோதரனின் தந்தை எனில் x-க்கு y என்ன உறவு? விடை :மகன் 2.A,B,C,D  மற்றும் E ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் .அதில் 2 அப்பா ,2 மகன்கள் ,2மனைவிகள்  அதில் 3 ஆண்கள் 2 பெண்கள் . அதில் ஒரு ஆசிரியர் அவர் வழக்கறிஞரின் மனைவி மற்றும் அந்த வழக்கறிஞர் டாக்டரின் மகன். E   என்பவர் ஆண் அல்ல . C என்பவர் யார் அந்த குடும்பத்தில் உள்ள இளைஞன் , D முதுமையானவர் . * E க்கு D என்ன உறவு? அ) கணவன் ஆ)மகன் இ)அப்பா ஈ) மனைவி விடை:அ *அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் யார்? அ) Cமற்றும்D     ஆ)Cமற்றும்E .     இ)  Eமற்றும்A .       ஈ)  Dமற்றும்E விடை:இ *.யாருடைய மனைவி ஆசிரியர்? அ) C     ஆ)  D      இ)   A     ஈ) B விடை:ஈ 3.எட்டு நபர்கள் S,T,U,V,W,X,Y மற்றும் Z  தனித்தனி மாடிகளில், எட்டு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.தரைத்தளத்தின் எண்1, முதல் தளத்தின் எண் 2 மற்றும் கடைசி மாடியின் எண்8. *Y என்பவர் மாடி எண் 1ல் உள்ளார். Y க்கும் T க்கும் இடையில் இரண்டு மாடி உள்ளது. *S என்பவர் X க்கு மேல் உள்ள மாடியில் உள்ளார். S இருப்பது இரட்டைப்படை எண் உள்ள மாடியில், *X க்கும்  W க்கும் இடையில்

மொக்க காமெடிஸ்

படம்
*ஒருத்தன் பசிக்குதுனு வீட்டுக்கு வந்தானா ஆனால் வெறும் சாப்பாடு மட்டும் தான் இருந்துதா அதனால அவங்க அம்மா காசு கொடுத்து காய் வாங்க சொன்னாங்கலா அத வாங்கீட்டு அவ ஊறுக்கு போய்டானா ஏன்? விடை: ஏனா அது ஊறுகா வா அத ஊருக்குப் போய்டா. *இந்தியாக்கு பாக்கிஸ்தானுக்கு சண்டையா ஆனா அங்க யாருமே இல்ல ஆனா ஒரு கோழி மட்டும் இருக்கு ஏன்? விடை:ஏனா அது நாட்டு கோழி அதா நாட்டுக்காக போய் இருக்கு *ஒருத்தரோட கார் சாவி தொலைஞ்சு போச்சு உடனே அவர் வைரமுத்து மகனிடன் போய் கேட்டாரா ஏன்? விடை:ஏனா அவர் பேரு கார்கி அதா. *ஒருத்தனுக்கு அடிபட்டு இரத்தமா வருதா ஆனா அவ நண்பன் போய் இலை வெட்டுனானா ஏன்? விடை: ஏனா அந்த டாக்டர் இள ரத்தம் கேட்டாரா.

குப்பைகளில் கொட்டப்படும் உணவுகளும் உணவில்லா மக்களும்

படம்
குப்பைத்தொட்டி குப்பைகளைப் போட மட்டுமே உணவுகளைக் குப்பைகளாக்க அல்ல ஆனால் தற்போது குப்பைகள் தரையில் உள்ளது உணவுகள் குப்பைத்தொட்டியில் உள்ளது உண்ணும் உணவையும் மதிப்பதில்லை உழவையும் மதிப்பதில்லை மீதமாகும் உணவுகள் பல உணவில்லாமல் வாடும் மனங்களும் பல அன்னத்தை வீணாக்காமல் அன்னதானம் ஆக்கலாம் இவ்வுலகில் பசியில்லா மனங்களை உருவாக்க முயற்சிக்கலாம்.

காட்டில் உள்ள புலி ஓவியம்

படம்
                                  அமைதியான காட்டில்                       ஒரு ஆபத்தான புலி

ஆசியக் கிண்ணம்2018 இறுதி சுற்றில் இந்தியா

படம்
இறுதி சுற்றிற்குத் தகுதி பெற்ற இந்தியா ஆனந்தம் பெருக்கெடுக்க இறுதி சுற்றை எதிர் நோக்கி  வெற்றியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் எம் மக்களுடன் நான்.

அன்பு

படம்
அன்பு குற்றம் பார்க்காது குறைகள் காணாது  அன்பை மட்டுமே தரும். தாயன்புக்கு நிகர் இவ்வுலகில் இல்லை அவள் அன்பு எதிர்பார்ப்பில்லா இயற்கை போன்றது. மனிதர்களின் அன்பு அவரவர் மனம் போன்றது எதிர்பார்ப்புடன் தோன்றும் அன்பு அன்பல்ல ஆபத்தில் ஆதரவு தரும் அன்பே உண்மையானது.

கரும்பலகையில் ஒரு சுண்ணக்கட்டி ஓவியம்(chalk art)

படம்
கருமையான கரும்பலகையில் வெள்ளை நிறம் கொண்ட சுண்ணக்கட்டியில் வரையும் அழகிய ஓவியம் கரும்பலகையின் சித்திரம்-அதுதான் சுண்ணக்கட்டி ஓவியம்.

வயலில் உலவும் எலி

படம்
வயலில் வாழும் கொழுத்த எலி பயிரைத் தின்னும் எலி சேமிக்கக் கற்றுக் கொடுத்த எலி நீண்ட மூக்குக் கொண்ட எலி மெது மெதுவாய் உடலை அசைத்து ஓடும் எலி குட்டி குட்டி கண்களால் மறைந்து ஓடும் எலி.

அழகிய முயல்குட்டி

படம்
அடர்ந்த காட்டுக்குள் அழகான நான்கு குட்டிக் கால்களும் இரண்டு கருமையான கண்களும் நீளமான இரண்டு குட்டிக் காதுகளும் கொண்ட குட்டி முயலை அழகான தாவல்களுடன் என்னை வந்து சேர்வாயா அல்லது என்னைக் கண்டு பயந்து ஓடுவாயா இனிமையான இயற்கை தந்த இறைவனின் அழகான படைப்பு நீ விரைவாக ஓடும் தன்மைக் கொண்ட வியப்பான படைப்பு நீ கவரும் கண்களைக் கொண்ட காந்த படைப்பு நீ உன்னைக் கண்ட என் கண்கள் கொள்ளும் ஆனந்தம் பல.

இரவு வணக்கம்🙏

படம்
பகலில் உழைத்து கலைத்தவர்கள் உறங்கும் நேரம் இன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சியான தருணத்திற்கு நன்றி செல்லும் நேரம் வருத்தமான நேரத்தை மறக்கும் நேரம் புதியதொரு நாளை வரவேற்க தயாராகும் நேரம் இன்றைய தவறைத் திருத்த கிடைத்த நன்நாளை எண்ணி அடுத்த நாள் பற்றிய பல கனவுகளுடன் உறங்கும் கண்கள் காணும் பல கனவுகளுடன்

சுவரோவியம்(wall painting)

படம்
உயிரற்ற சுவருக்கும் உயிரூட்டும் உயிரோவியம் மனதிற்கு இன்பம் தரும் மகிழோவியம் சுவருக்கு அழகூட்டும் அழகோவியம் வீட்டையையும் நாட்டையும் அழகு செய்யும் பேரோவியம்

நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவம்

படம்
நாடுகளுக்கு இடையே நட்பு வேண்டும்                      இதனால் போரைத் தடுக்கலாம் அமைதியை நிலைநாட்டலாம் நாடுகளுக்கு இடையே அன்பு வேண்டும்                       இதனால் நாடெங்கும் கருணை மற்றும் இரக்கத்தைப் பரப்பலாம் நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களும் நம் உறவினர்களே அனைவரும் நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களே இப்போது தான் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன இதற்கு முன் நம் முன்னோர்கள்அனைவரும் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் தானே அப்போது அனைவரும் நம் உறவினர்கள் தானே பின்னர் ஏன் இந்த பிரிவினை? எதற்காக இந்த போர்? மக்களைக் காக்கவா காப்பதற்காக தான் என்றால் அனைவரும் போரின்றி வாழ்ந்தாலே போதுமே மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் உலகமெங்கும் சகோதரத்துவம் பரப்பி போர் அகற்றி மனிதநேயம் காப்போம்.

விநாயகர் சதுர்த்தி

படம்
முழு முதற்கடவுளின் திருநாள் ஊரெங்கும் மகிழ்ச்சி பெருகும் பெருநாள் உல்லாசம் ஊற்றெடுக்கும் தமிழ் நாள் சிலைகள் பெருகும் அந்நாள் ஆற்றில் கரையும் திருநாள் முன்னோர் உருவாக்கிய பெருநாள் நிலத்தடி நீரைப் பெருக்கும் அற்புத நாள் ஆடிப்பெருக்கில் அரிக்கப்பட்ட மணலை ஆவணியில் சரிசெய்ய பிறந்த அறிவியல் நாள் இத்துணை சிறப்பு வாய்ந்த நன்நாள் அந்நாள் நம் முழுமுதற் கடவுளின் விநாயகர் சதுர்த்தி.

தமிழின் சிறப்பு கவிதை

படம்
சங்க இலக்கியத்தால் இலக்கியம் புகட்டி தொல்காப்பியம் வாயிலாக இலக்கணம் கூறி புறநானூறின் மூலம் தமிழர் வரலாற்றை உணர்த்தி அகநானூறில் அகப்பொருள் சொல்லி நாலடியார் மூலம் வேளாண்மை கற்றுக் கொடுத்து சிலப்பதிகாரத்தில் வாய்மை உணர்த்தி மகாபாரதம் மூலம் போர் கூறி கலிங்கத்துப்பரணியினால் வீரம் சொல்லி பக்தி இலக்கியம் மூலம் மனஅமைதி தந்து தூது மூலம் காதல் சொல்லி திருக்குறள் வாயிலாக வாழ்வியல் நெறி ஊட்டி பழமொழியில் பாடம் புகட்டும் படிக்க படிக்க சலிக்காத புதுமை தரும் என் தமிழ் மொழி.

கைவிடப்படும் குழந்தைகள்

படம்
காதலின் அர்த்தம் புரியாமல் காதலின் பெயரால் தவறு செய்து பின் தவறைத் திருத்தி அவரவர் வாழ்க்கை புரிந்து பிரிகிறார்கள் காதலர்கள் அந்த தவறின் விளைவாய் வரும் குழந்தையின் நிலையோ கைவிடப்பட்ட குழந்தை அவர்களுக்கு இந்த சமுதாயம் வைக்கும் பெயர் அநாதை! தாய் தந்தை அரவணைப்பில் கஷ்டம் தெரியாமல் வாழும் சில ஜீவன்கள் செய்யும் தவறு ஒன்றும் அறியாத அப்பச்சிளங்குழந்தையை அநாதை ஆக்குகிறது ஆண்பிள்ளைப் பெறும் ஆர்வத்தில் பெண்பிள்ளைகளின் பெருமை அறியாமல் அவர்களைச் சாக்கடையில் தூக்கி எறிகிறது இச்சமூகம் பெண்ணுயிர் இல்லாமல் ஆணுயிர்  இல்லை என்பது புரியாமல் பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்காக என்றும் குழந்தைகளைத் தண்டிக்காதீர்! அடுத்த தலைமுறையை அநாதை ஆக்காதீர்!

தூய்மை நம் கடமை

படம்
நிலத்தின் தூய்மை மண்ணைக் காக்கும் மண்ணின் தூய்மை மனிதனைக் காக்கும் நீரின் தூய்மை தாகம் தீர்க்கும் காற்றின் தூய்மை சுவாசம் தரும் ஆகாயத்தின் தூய்மை மேகமாகும் மேகத்தின் தூய்மை மழையாய் பொழிகிறது மழை நமக்கு உணவாகிறது குடிநீராக உள்ளது ஐம்பூதங்களும் தூய்மையாக தான் உள்ளது அவை உழைப்பது நமக்காக - ஆனால் நாம் தான் அவற்றை அசுத்தம் செய்கிறோம் சுத்தம் செய்வதே நம் கடமை அசுத்தம் செய்வதல்ல நம்மைக் காக்கும் கடமையைச் சரியாக செய்கிறது இயற்கை - ஆனால் நமக்கான நம் கடமையை மறக்கிறோம் தூய்மை நமக்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது தூய்மையைக் கடைப்பிடித்து இனிமையாய் வாழ்வோம்.

பூமியின் அடிப்படைத் தகவல்கள்

படம்
*பூமியின் மொத்தப் பரப்பு :510072000ச.கி.மீ *மொத்த நிலப்பரப்பு : 148940000ச.கி.மீ *மொத்த நீர்ப்பரப்பு : 361132000ச.கி.மீ *சூரியனிலிருந்து தூரம் : 149407000ச.கி.மீ *சராசரி எடை : 5.94×1019 மெட்ரிக் டன் *மக்கள் தொகை : 7432663275 கோடி *மொத்த கண்டங்கள் : 7 *ஐ.நா.உறுப்பு நாடுகள் :193 *மிகப்பெரிய கண்டம் : ஆசியா *மிகச்சிறிய கண்டம் : ஆஸ்திரேலியா *மிகப்பெரிய நாடு : ரஷ்யா *மிகச்சிறிய நாடு : வாடிகன் *அதிக மக்கள்தொகை நாடு : சீனா *குறைந்த மக்கள்தொகை நாடு: வாடிகன் *மிகப்பெரிய தீபகற்பம் : சௌதி அரேபியா *மிகப்பெரிய தீவு : கிரீன்லாந்து *மிக உயர்ந்த பகுதி : எவரெஸ்ட் *மிக தாழ்ந்த பகுதி : சாக்கடல் *மிக வெப்பமான பகுதி : தலோல் *மிகக் குளிரான பகுதி : பிளோட்டோ ஸ்டேஷன் *மிக ஈரமான பகுதி : மௌசின்ராம் *மிக உலர்ந்த பகுதி : அட்டகாமா பாலைவனம் *மிகப்பெரிய நதி : அமேசான் *மிக நீளமான நதி : நைல் *மிகப்பெரிய கடல் : பசுபிக்கடல் *மிகப்பெரிய உப்பு நீர் ஏரி : காஸ்பியன் கடல் *மிகப்பெரிய நன்னீர் ஏரி : சுப்பீரியர் ஏரி *மிகப்பெரிய நீர் வீழ்ச்சி : ஏஞ்சல் *மிகப்பெரிய சதுப்பு

வித்தியாசமான பறவை ஓவியம்(bird modern art)

படம்
                           

மனித உழைப்பு(அந்தக் காலம்) இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்)

படம்
கடின உழைப்பால் வெற்றி அடைய                       நினைப்பது         மனித உழைப்பு(அந்தக்காலம்) இயந்திர உழைப்பால் சிரமமில்லாமல்     வெற்றி அடைய நினைப்பது          இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) தன்னை நம்பி தன் மேல் நம்பிக்கைக்                         கொண்டது        மனித உழைப்பு(அந்தக்காலம்) தான் உருவாக்கிய இயந்திரத்தை              மட்டும் நம்புவது        இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) இயற்கையை நாடி இயற்கையை                         இரசித்தது         மனித உழைப்பு(அந்தக்காலம்) செயற்கையைத் தேடி உழைப்பைத்                        தொலைத்தது          இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) துன்பம் பல தந்து வெற்றியினால்                    இன்பக்கனி தருவது          மனித உழைப்பு(அந்தக்காலம்) போலி இன்பம் மட்டும் தந்து             சோம்பேறியாக்கியது        இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) கடின உழைப்பால் ஆரோக்கியம் தந்தது        மனித உழைப்பு(அந்தக்காலம்) சுலபத்தால் சோம்பேறியாகி     ஆரோக்கியம் குறைந்தது         இயந்திர வளர்ச்சி(இந்தக்காலம்) மனித உழைப்பால் உயர்ந்த இயந்திர                

வேடிக்கை உலகம்

படம்
தன் நிலையை உயர்த்தாமல் பிறர்     முன்னேற்றத்தை எண்ணி   வருந்துகிறான் உயர்வுப் பெற உழைப்பை நம்பாமல்   குறுக்குவழி தேடுகிறான் தன் குறைகளை சரி செய்யாமல்    பிறர் குறைகளுக்கு மட்டும் செவி           சாய்க்கிறான் தன் முன் இருக்கும் குப்பையைக் கூட    எடுக்காதவன் தூய்மைப் பற்றிப்    பேசுகிறான் உடல் குறைபாடு உள்ளவரை ஊனம்    என்று மனதில் குறை வைத்து    ஊனமாய் அலைகிறான் தவறைக் குறைக்கக் கடவுளை       உருவாக்கியவன் இப்போது கடவுளின்  பெயரால் தவறு செய்கிறான் பெண்ணைக் காக்க வேண்டிய ஆணே      அவளை அழிக்கிறான் குழந்தையைக் காக்க வேண்டிய தாயே      தன் பிள்ளைகளை அழிக்கிறாள் அன்பும் பாசமும் பாராட்டாமல்       பணத்தையும் ஊழலையும்   பேசி தன்னால் தன்னையே அழித்துக் கொள்ளும்     வேடிக்கை உலகமடா இது!

தமிழாசிரியர்களின் இயற்பெயரும் புனைப்பெயரும்

1.பி.வி.அகிலாண்டம்      -  அகிலன் 2.பீ.அபிபுல்லா -  அபி 3.சா.அப்பாவுபிள்ளை     -  பாம்பன் சுவாமிகள் 4.அரங்கநாதன்  - ஞானக்கூத்தன் 5.அருண்மொழித்தேவர் - சேக்கிழார் 6.இராபர்ட்-டி-நொபிலி - தத்துவபோதகர் 7.ப.க.இராமசாமி - புலமைப்பித்தன் 8.தி.இராஜகோபால் - சுரதா 9.உமறுகத்தாப் - உமறுப்புலவர் 10.அரங்க.எத்திராசன் - வாணிதாசன் 11.கான்ஸ்டன்டியன் ஜோசப் பெஸ்கி - வீரமாமுனிவர் 12.இரா.சு.கிருஷ்ணசாமி - வல்லிக்கண்ணன் 13.இரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி 14.கூத்த முதலியார் - ஒட்டக்கூத்தர் 15.கோதை - ஆண்டாள் 16.சீ.சாகுல்ஹமீது - இன்குலாப் 17.கே.எஸ்.சுந்தரம் - ஆதவன் 18.பி.சுப்பிரமணி - மௌனி 19.சுப்ரமணியம் - அபிராமிபட்டர் 20.சி.சுப்பிரமணியம் - பாரதியார் 21.கனக சுப்புரத்தினம் - பாரதிதாசன் 22.சூரியநாராயண சாஸ்திரி - பரிதிமாற்கலைஞர் 23.ஜ.தியாகராஜன் - அசோகமித்திரன் 24.சீ.திரிபுரசுந்தரி - லட்சுமி 25.டி.கே.துரைசாமி - நகுலன் 26.சு.துரைராசு - முடியரசன் 27.ஞா.தேவநேசன் - தேவநேயப்பாவாணர்

ஆசிரியர் தினம்

படம்
கல்விக் கற்பித்தவர் ஒழுக்கம் கற்பித்தவர் நல்வழி காட்டியவர் அன்னையாய் அன்புக் காட்டியவர் தந்தையாய் அறிவுப் புகட்டியவர் கலையைக் கற்பித்து கலைஞர் ஆக்கியவர் அறிவியல் கற்பித்து அறிவியலாளன் ஆக்கியவர் எழுதக் கற்றுக் கொடுத்து எழுத்தாளன் ஆக்கியவர் படிக்கக் கற்றுக் கொடுத்து படிப்பாளி ஆக்கியவர் பிழைப்பின்றிப் பேசக் கற்றுக் கொடுத்து பேச்சாளன் ஆக்கியவர் தன் பிள்ளை என்று உச்சி முகர்ந்து பாராட்டுபவர் இத்தனை ஆக்கும் பண்புடையவரான ஆசிரியருக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

போரில்லா போட்டியில்லா அமைதியான பூமி

படம்
மனிதனுக்குக் கிடைத்த பரிசு அமைதியான வாழ்க்கை-ஆனால் இங்கு போட்டியும் பொறாமையையும் மட்டுமே உள்ளது போட்டியின் முடிவு பொறாமையில் முடிகிறது பொறாமை வன்மத்திற்கு வழிவகுக்கிறது வன்மம் போரை உருவாக்குகிறது போரினால் மக்களின் அமைதி அழிக்கப்படுகிறது அமைதியைக் கொடுக்காமல் வருத்தத்தை மட்டும் தரும் போர் எதற்கு? ஒரு மனிதனைக் காக்க மற்றொரு மனிதனைக் கொல்வதா? ஒரு நாட்டைக் காக்கும் கருவி மற்றொரு நாட்டை அழிப்பதா? இதன் பெயர் மனிதமா? போரினால் என்னப் பயன் யாருக்குப் பயன் போரினால் உண்டாவது அழிவு மட்டுமே அனைவரும் மனிதர்கள் தானே அனைவருக்கும் இன்பமும் உண்டு துன்பமும் உண்டு-ஆகவே ஆயுதத்தைப் பகிராமல் அனைத்து இடங்களிலும் அன்பைப் பகிர்ந்து அமைதியான பூமியை உருவாக்குவோம்.

சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். முத்தமிழ் காப்பியம், முத்தமிழ் நாடுகளின் நாடகமாக காட்டிய காப்பியம். சிலப்பதிகாரம் தோன்றிய காலம் கி.பி.2ம் நூற்றாண்டு. தெய்வங்களையும் அரசர்களையும் தலைவராகப் பாடப்பட்ட காலத்தில் சாதாரண மக்கள் பற்றிய வாழ்க்கையை உணர்த்திய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதனால் தான் அதை குடிமக்கள் காப்பியம் என்றுக் கூறினர். சிலப்பதிகாரம் 3 காண்டங்கள் மற்றும் 30 காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் 10 காதைகளையும், மதுரைக்காண்டம் 13 காதைகளையும், வஞ்சிக்காண்டம் 7 காதைகளையும் உடையது. காதை           காதை என்னும் தலைப்பில் உள்ளவை 22. வரி என்ற தலைப்பில் 2ம், பாாடல் என்ற தலைப்பில் 1  ஆக முப்பது. சிலம்பு         ஒலி, மகளிர் காலணி வகைை, பூசாாரிகளின் கைச் சிலம்பு, மலைை, பக்கமலை, குகை  போன்ற பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி தருகின்றன.        சிலம்பு என்ற சொல் சிலப்பதிகாரத்தில் காலணி என்ற பொருளில் 41 இடங்களிலும் மலை என்ற பொருளில் 3 இடங்களிலும் பயன் பெற்றுள்ளது. கண்ணகி       கண்ணகி 8 ஆண்டுகள் கோவலனோடு வாழ்கிறாள். குழந்தைகள் இல்லை. பின் 12 ஆண்டுகள் மாதவியுடன் வாழ்கிறான

பெண் கவிதை

படம்
பெண்ணிற்கு வீரம் வேண்டும் தன்னை இழிவுபடுத்துபவரைத் திரும்பி பார்க்க வைக்க பொறுமை வேண்டும் தன்னை மதிப்பவர் வாய்மொழி கேட்க அடக்கம் வேண்டும் தன்னை சுதந்திரமாய் இருக்க செய்பவரிடம் அடங்கி இருக்க அமைதி வேண்டும் தனது இலட்சியத்தில் தெளிவடைய அன்பு வேண்டும் தாய் என்ற தகுதி அடைய உறுதி வேண்டும் கற்பு என்பது ஆணிற்கும் உண்டு என்பதை நிரூபிக்க தன்னம்பிக்கை வேண்டும் பல தடைகளைத் தாண்டி சாதனை படைக்க இந்த அனைத்து குணங்களும் உடையவள் பெண் அதனால் தான் தாய் என்னும் சொல் அனைவரையும் மதிக்க வைக்கிறது.