இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சந்தோஷம் கவிதை

படம்
வாழ்க்கையின் வரம் சந்தோஷம் மனிதனின் பலம் சந்தோஷம் மனநிறைவால் வருவது சந்தோஷம் மன அமைதிக்கு வித்திடுவது சந்தோஷம் அறுவடையில் உழவனின் சந்தோஷம் குழந்தைகள் தாயின் சந்தோஷம் கூடி வாழ்தல் அனைவரின் சந்தோஷம் சுப நிகழ்ச்சிகள் விருந்தினர் சந்தோஷம் சந்திரன் வருகை இரவின் சந்தோஷம் சூரியன் வருகை பகலின் சந்தோஷம் தர்மனுக்கு உண்மையில் சந்தோஷம் சந்தோஷம் தான் வாழ்வின் நிம்மதி துன்பத்தில் இன்பம் காண்பது சந்தோஷம் சந்தோஷத்தில் இன்பம் காண்பதும் சந்தோஷம்.

இலட்சியம் கவிதை

இலட்சியம் இல்லா வாழ்வு கூடில்லா பறவை போன்றது வேரில்லா மரம் போன்றது குறிக்கோளற்ற எண்ணமும் செயலும் என்றும் நன்மை பயப்பதில்லை இலட்சியம் என்றும் உண்மைக்கும் நேர்மைக்கும் பங்கம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது இலட்சியத்தை அலட்சியம் ஆக்காமல் வாழ்வில் ஒரு இலட்சியம் வைத்து சிகரம் தொடுவோம்.

இறைவன்

படம்
இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் மனிதர்களின் மனதில் இறைவன் பலவிதம் சிலரின் நினைவில் இறைவன் ஒளி பொருந்தியவன் சிலர் எண்ணத்தில் இறைவன் ஒலி பொருந்தியவன் சிலர் நினைவில் இறைவன் உருவம் உடையவன் ஆன்மீகவாதியின் மனதில் இறைவன் வாழ்கிறான் நாத்திகவாதியின் புத்தியில் இறைவன் வாழ்கிறான் ஆன்மிகம் உள்ளதால் தான் நாத்திகம் உள்ளது-ஏனெனில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்க தானே செய்கிறது.

வரதட்சணை

படம்
மண் நம்மைத் தாங்க நாம் தரவில்லை வரதட்சணை காற்றை சுவாசிக்க நாம் தரவில்லை வரதட்சணை நீர் உன் தாகம் தீர்ப்பதற்காக நாம் தரவில்லை வரதட்சணை ஒளி தரும் சூரியனுக்கு நாம் தரவில்லை வரதட்சணை இதம் தரும் நிலவிற்கு நாம் தரவில்லை வரதட்சணை உணவு தரும் உழவிற்கு நாம் தரவில்லை வரதட்சணை பசுமை தரும் இயற்கைக்கு நாம் தரவில்லை வரதட்சணை எதற்கும் நாம் விலைகொடுக்க முடியாது அதுபோல தான் மனைவி தரும் அன்பும் விலைமதிப்பற்றது அவளிடம் அன்பை வரதட்சணையாக கேட்க பணத்தையும் நகையையும் சில உயிரற்ற பொருள்களையும் அல்ல.

மழை

படம்
விவசாயிகளின் எதிர்பார்ப்பு மரங்களின் வாழ்வு ஆறுகளுக்குக் காரணமானது மின்சாரத்திற்கு உதவுவது வானத்தில் பிறந்து மண்ணில் முடிந்து ஆறில் கலந்து மக்களுக்குக் குடிநீராகவும் வாழ்வாதாரமாகவும் அமைவது விலங்குகளின் குடிநீராக அமைவது பறவைகளுக்கு உணவாவது உடலைத் தூய்மை செய்வது இயற்கையின் சக்தி இது பூவின் சிறுதுளி மண்ணின் மழைத்துளி வாழ்வின் உயிர்த்துளி சிறுதுளியே பெருவெள்ளமானது சேமிப்பின் பிறப்பிடமானது                             மழைத்துளி

குழந்தைப் பருவம் கவிதை

படம்
எதையும் எதிர்ப்பார்க்காமல் புன்னகித்த பருவம் கவலை அறியாமல் இருந்த பருவம் மழலை மொழியில் வாழ்ந்த பருவம் தாய் மடியில் இருந்த பருவம் தன் அழகிய செயலால் மற்றவர் துயர் கலைத்த பருவம் மெல்ல மெல்ல நடை பழகி நடக்க கற்றப் பருவம் பாசம் கற்றப் பருவம் நேசம் கற்றப் பருவம் பொய் அறியாப் பருவம் உண்மை புரியும் பருவம் பொறாமை இல்லாப் பரும் பயம் அறியாப் பருவம் குழந்தை என்றால் தெய்வம் என்பர் ஏனென்றால்-அவர்கள் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்பதால் தான்.

பேருந்து பயணம்

பேருந்தில் சன்னல் ஓரத்தில் இடம் பிடித்தேன் இயற்கையைக் கண்டு கழித்தேன் கூட்டத்தில் இடம் பிடித்தேன் கும்பலில் சிக்கி முழித்தேன் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தேன் சில சமயம் தூங்கி வடிந்தேன் பாடல்கள் பல கேட்டு மகிழ்ந்தேன் நாயம் பல பேசி சிரிந்தேன் உறவுகள் பல கண்டு பிடித்தேன் உணவுகள் சில வாங்கி சுவைத்தேன் பேருந்து நிலையத்தில் இறங்கினேன் எப்போது இப்பயணம் தொடரும் என்று.

என் இனிய தோழி

படம்
என் தோழியே என் ஆசிரியையுமானால்! அன்பைக் கற்றுக் கொடுத்தாள் அவளின் அடிமையானேன் அறநெறியைக் கற்றுக் கொடுத்தாள் அவளின் நேசம் புரிந்தேன் படிக்கக் கற்றுக் கொடுத்தாள் அவளின் சீடனானேன் மாரியாதைக் கற்றுக் கொடுத்தாள் அவளின் மாணவனானேன் தாயின் அன்பைக் கொடுத்தாள் தாய்ப்பாசம் உணர்ந்தேன் என் வேலையையும் அவள் செய்து எனக்கு வேலை கற்றுக்கொடுத்தாள் அவளின் வெண்மனம் புரிந்தேன் என்னை இன்னொரு தந்தை என்றாள் என் மகளாய் உணர்ந்தேன் சண்டைப் போட கற்றுக் கொடுத்தாள் என் சகோதரியும் அவளென அறிந்தேன் மாதா பிதா குரு என்பார்கள் இம்மூன்றையும் உன்னில் கண்டேன் உன்னதமான உன் அன்பில் உன்னோடு நான் கழித்த நாள்கள் நீங்கா நினைவுகளுடன் என்றும் என் மனதில் என் இனிய தோழியே!

தோழா கவிதை

படம்
தோழா! தாயாய் என்னை இதயத்தில் பாதுகாத்தாய் தந்தையாய் என்னை மார்ப்பில் சுமந்தாய் சகோதரனாய் என்னுடன் சண்டையிட்டாய் அன்பால் என்னை சீராட்டினாய் அரவணைப்பால் என்னைத் தாலாட்டினாய் மரத்தின் வேராய் எனக்கு பலமூட்டினாய் உறவாய் எனக்குத் தோள் கொடுத்தாய் உயிராய் என்னைப் பாதுகாத்தாய் பிரச்சனைத் தீர்க்கத் துணை நின்றாய் தோழா! உன்னுடன் வாழ்ந்த நாள்களே என் சொர்க்கம்                                      இப்படிக்கு                              உன் அன்புத் தோழி

புத்தம் புது காலை கவிதை

படம்
காலை என்பது ஒரு பொழுது-அது பொதுவானது தினம் ஒரு காலை தினம் ஒரு மாலை-இருப்பினும் காலை புதுமையைத் தரக்கூடியது புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியது காலை எழுந்தவுடன் படிப்பு-ஏனெனில் மனதில் அமைதி நிலவும் பொழுது நிம்மதி கொடுக்கும் பொழுது மெல்ல மெல்ல மயக்கம் தெளியும் பொழுது சூரியனின் முதற்பொழுது நிலவு மறையும் பொழுது வானத்தின் வண்ணப்பொழுது பூமிக்கு ஒளி வரும் பொழுது வெளிச்சம் வரும் பொழுது இருள் மறையும் பொழுது இன்பம் தரும் பொழுது மொத்தத்தில் பூமியின் புதுப்பொழுது புத்தம் புது காலை.

கல்லூரி கவிதை

படம்
மாணவனாய் மட்டும் இருந்த என்னை மனிதனாக்கிய இடம் வாழ்க்கையின் அர்தத்தைக் கற்றுத் தந்த இடம் போட்டிகளின் பங்களிப்பையும் வெற்றியின் உற்சாகத்தையும் தோல்வியின் அனுபவத்தையும் கற்றுத் தந்த இடம் வானவில்லின் வண்ணம் போல் வாழ்வை இனிமையாக்கிய இடம் நட்பின் சிறப்பையும் ஆசிரியர்களின் சிறப்பையும் உணர்ந்த இடம் வண்ணத்துப்பூச்சி போல்-என்னைப் பல வண்ணங்களால் அலங்கரித்த இடம் ஒற்றுமையின் அர்த்தத்தை உணர்த்திய இடம் தோழமை பாராட்டிய இடம் தோள் கொடுக்கும் தோழனோடு சுற்றிய இடம் கோபம் மறந்த இடம் சோகம் தொலைத்த இடம் சிநேகம் வளர்த்த இடம் பொறாமை இல்லாத இடம் சாதி இல்லாத இடம்.               என் கல்லூரி காலம்

கலியுகம்

உண்மை அழிந்த யுகம் தீமை வளர்ந்த யுகம் பொய்மை நிறைந்த யுகம் மனிதனைப் பொம்மையாக்கிய யுகம் மடமை நிறைந்த யுகம் கடமை மறந்த யுகம் கண் இருந்தும் குருடாக்கிய யுகம் காது இருந்தும் நல்லவை கேட்க மறந்த யுகம் தன் கையை மறந்து பிறர் கையை எதிர்பார்க்கும் யுகம் தன் வாயை மறந்து பிறர் வாயால் பேசும் யுகம் நல்வழி மறந்து பாதையை இழந்த யுகம் பிறப்பை மதிக்காத யுகம் இறப்பை ஏற்காத யுகம் மனிதனை மனிதன் மதிக்காத யுகம் இயற்கையை அழிக்கும் யுகம் இன்பம் குறைந்த யுகம்.

பள்ளி

கலையின் பிறப்பிடம் கற்றலின் சிறப்பிடம் மாணவர்களை உருவாக்குமிடம் ஒழுக்கத்தைக் கற்றுத் தருமிடம் சிந்தனையின் பிறப்பிடம் வசந்தத்தின் சிறப்பிடம் தன்னம்பிக்கையின் ஊற்றிடம் திறமையை வளர்க்கும் முதலிடம் அறிவியல் அறிவை வளர்க்குமிடம் மொழிப்பற்றை உருவாக்குமிடம் தன்னலம் அற்ற இடம் சுயநலம் அகற்றுமிடம் வள்ளலை உருவாக்குமிடம் அல்லல் அகற்றுமிடம் உன்னை உணர வைக்குமிடம் சகோதரத்துவம் வளருமிடம் சந்ததி தலைக்குமிடம் நம் கடமையை உணர்த்துமிடம் மொத்தத்தில் வாழ்வின் இனிமையை உணர்த்துமிடம்                   பள்ளி!

அம்மா கவிதை

படம்
அ என்றால் நினைவுக்கு வருவது அம்மா❤ அம்மா❤ என்றதும்  நினைவுக்கு வருவது அன்பு அன்பென்றால் அவள் தான்❤ நம்மைக் கருவில் காத்தவளும் அவள் தான் ❤ நாளும் நம்மை நினைவில் வைத்தவள்❤ நெஞ்சம் முழுதும் நேசம் வைத்தவள்❤ உன் தவறை மறக்க தெரிந்தவள்❤ உன் வேதனையை சுமக்க தெரிந்தவள்❤ உன் நிந்தனையை ஏற்றுக் கொள்பவள்❤ உன்னை உச்சி நுகர பாராட்டுபவள்❤ உறவைக் கற்றுத் தருபவள்❤ உணர்வைப் புரிந்துக் கொள்பவள்❤ உண்மை பேசக் கற்றுக் கொடுத்தவள்❤ தன் பிள்ளைப் பேச்சைக் கேட்டு ஊமையானவள்❤ உன் பெருமை சொல்ல வார்த்தை இல்லை❤ உன் புகழ் சொல்லாத மேடை இல்லை❤ இத்துணை சிறப்புடைய படைப்பிற்கு  அன்னையர் தின வாழ்த்துகள் 😍😍

சூரியன் கவிதை

படம்
பூமியின் அழகைப் பார்க்க உதவும் ஒளி ஓசோன் மூலம் நம்மைக் காக்கும் ஒளி முதன்மை கோள் ஒளி(சூரியன்) தீமையைச் சுட்டெரிக்கும் ஒளி   வெளிச்சம் தரும் ஒளி விட்டமின் தரும் ஒளி விண்மீன் வெளிச்சம் ஒளி பகலைத் தரும் ஒளி இருளை அகற்றும் ஒளி பூமியைத் தந்த ஒளி உன்னதமான ஒளி இயற்கை தரும் ஒளி இதமான காலையைத் தரும் ஒளி மிதமான மாலையைத் தரும் ஒளி அழகைக் காண்பிப்பதும் நீ வெப்பம் தருவதும் நீ கடவுளாக நீ உன் அற்புதம் போற்றும் பக்தன் நான்.

இயற்கை கவிதை

படம்
இன்பம் தரும் இயற்கை மனத்துன்பம் தீர்க்கும் இயற்கை நோய் தீர்க்கும் இயற்கை நோய்க்கு மருந்து தரும் இயற்கை மனித வாழ்வின் வரம் இயற்கை மனித இனம் அழிப்பதோ இயற்கை சுத்தமான காற்றைத் தரும் இயற்கை மக்களைக் காக்கும் ஆயுதம் இயற்கை இன்னிசை பாடும் இயற்கை நன்னீர் தரும் இயற்கை இதமான சூழல் தரும் இயற்கை வானின் நீல நிறம்  இயற்கை மண் வாசனை இயற்கை சத்தான உணவு தரும் இயற்கை மனிதனின் சொத்தே இயற்கை இயற்கையின் அற்புதம் பல செயற்கை தரும் அழிவோ பல இயற்கையைப் பாதுகாத்து-உன் இளமையைப் பாதுகாத்துக் கொள்.

கரைபுரண்ட காவிரி

படம்
என் காவிரி தாயே! உன் பிள்ளைகள் குரல் கேட்டு ஓடி வந்தாயா?என் தாயே! உன்னைக் காண உன் பிள்ளைகளும் ஓடி வருகின்றனர் உன்னுடன் பல புகைப்படம் எடுக்கின்றனர் பாலம் தாண்டி பறந்தது உன் அலை காலம் தாண்டி பறக்க வேண்டும் உன் புகழ் உன்னைப் பாராட்ட எனக்கு அனுபவம் இல்லை அதனால் தான் புகழ நினைக்கிறேன் தாயே!எனக்கு தெரியும் -உன் பிள்ளைகளை நீ ஏமாற்ற மாட்டாய் என்று தாயால் எப்படி தன் பிள்ளையைக் காக்க வைக்க முடியும் வா தாயே! பாரெங்கும் செழிப்பு செய்ய வா!

Photography

படம்
      Photos are remember our happiest moment in our life. Photos only capture our feelings and it will remember our past.

காதல் செய்வீர் உலகத்தீரே!

படம்
காதல் என்றால் என்ன என்றேன் என் அம்மாவிடம் அவள் கூறினாள் அன்பென்று காதலின் அர்த்தம் உணர்ந்தேன் காதலிக்க ஆரம்பித்தேன் என் தாயைக் காதலித்தேன் அவள் அன்பை உணர்ந்தேன் என் தந்தையைக் காதலித்தேன் அவரின் கஷ்டம் புரிந்தேன் என் சகோதரனைக் காதலித்தேன் அவன் அக்கறை உணர்ந்தேன் என் நண்பர்களைக் காதலித்தேன் அவர்களின் நட்பைப் புரிந்தேன் என் வாழ்க்கையைக் காதலித்தேன் வாழ்வின் அர்த்தம் உணர்ந்தேன் என்னை நான் காதலித்தேன் என்னை நான் புரிந்தேன் அனைவரும் காதல் செய்யுங்கள் அன்பைப் பகிருங்கள் காதல் செய்வீர் உலகத்தீரே!

ஔரங்கசீப்

படம்
                          ஔரங்கசீப்                       (கி.பி.1658-கி.பி.1707)               ஔரங்கசீப் முகலாய மன்னர்களுள் ஒருவர். இவர் ஷாஜஹானின் மூன்றாவது மகன். தனது மூன்று சகோதரர்களுடன் போரிட்டு ஆட்சியைக் கைபற்றினார்.        மன்னரான போதிலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். செருப்பு தைத்து அதனால் சேமித்து வைக்கப்பட்ட பணத்தில் தான் அவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றது.        இவர் ஆட்சியில் முகலாய பேரரசு பரந்து இருந்தது. அவர் மறைவிற்கு பின் அப்பேரரசை ஆளக்கூடிய வலிமை உள்ள புதல்வர்கள் தோன்றவில்லை.       இஸ்லாமிய புனித நூலான குரானை தவறாமல் தினந்தோறும் படித்து வந்தார். இந்துகளை அரசு பதவியில் இருந்து அகற்றினார். இந்துக்களின் புனித பயண விதியினை மீண்டும் விதித்தார்.

படப்பிடிப்பு நினைவாற்றல்

படிக்கும் பாடத்தை அல்லது படித்த பத்திரிக்கைச் செய்தியை உங்களால் அப்படியே ஒப்புவிக்க முடியுமா? சிலருக்கு அது சாத்தியமான பழக்கம்.            தியோடர் ரூஸ்வெல்ட் என்பவர் அமெரிக்க அதிபராாய் இருந்தவர். இவருக்கு அந்த நிினைவாற்றல் இருந்ததாம்.           ஒரு பத்திரிகையை எடுத்து ஒன்று அல்லது அதற்கு குறைவான நேரத்தில் படித்து விட்டு , பார்த்த அனைத்தையும் அப்படியே ஒப்புவிப்பாராம்.           விவேகானந்தரிடமும் இத்தகு வியத்தகு ஆற்றல் இருந்ததாம். சிறு வயதிலேயே குழந்தைகளைப் படப்பிடிப்பு நினைவாற்றலில் பழக்கினால் இது எளிதில் கை கூடுமாம்.

நேரம் ஒதுக்குங்கள்

படம்
சிரிப்பதற்கு நேரம் ஒதுங்குங்கள் அது இதயத்தின் இசை சிந்திப்பதற்கு நேரம் ஒதுங்குங்கள் அது சக்தியின் பிறப்பிடம் விளையாட நேரம் ஒதுங்குங்கள் அது இளமையின் ரகசியம் படிக்க நேரம் ஒதுங்குங்கள் அது அறிவின் ஊற்று நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது மகிழ்ச்சிக்கு வழி தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் அது தெளிவிற்கு வழி உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றிக்கு வழி!

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

*வாழ்க்கை ஒரு சவால் ; அதனை சந்தியுங்கள் *வாழ்க்கை ஒரு பரிசு ; அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் *வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் ; அதனை மேற்கொள்ளுங்கள் *வாழ்க்கை ஒரு சோகம் ; அதனை கடந்து வாருங்கள் *வாழ்க்கை ஒரு துயரம் ; அதனை தாங்கிக் கொள்ளுங்கள் *வாழ்க்கை ஒரு கடமை ; அதனை நிறைவேற்றுங்கள் *வாழ்க்கை ஒரு விளையாட்டு ; அதனை விளையாடுங்கள் *வாழ்க்கை ஒரு வினோதம் ; அதனை கண்டறியுங்கள் *வாழ்க்கை ஒரு பாடல் ; அதனை பாடுங்கள் *வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் ; அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் *வாழ்க்கை ஒரு பயணம் ; அதனை முடித்து விடுங்கள் *வாழ்க்கை ஒரு உறுதிமொழி ; அதனை நிறைவேற்றுங்கள் *வாழ்க்கை ஒரு காதல் ; அதனை அனுபவியுங்கள் *வாழ்க்கை ஒரு அழகு ; அதனை ஆராதியுங்கள் *வாழ்க்கை ஒரு உணர்வு ; அதனை உணர்ந்து கொள்ளுங்கள் *வாழ்க்கை ஒரு போராட்டம் ; அதனை.எதிர்கொள்ளுங்கள் *வாழ்க்கை ஒரு குழப்பம் ; அதனை விடை காணுங்கள் *வாழ்க்கை ஒரு இலக்கு ; அதனை எட்டிப் பிடியுங்கள்

சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

சிறு சிறு சேமிப்பே பெரிய பெரிய தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. சிறு சிறு தவறுகளைத் திருத்தாததே பெரிய தவறுகளுக்குக் காரணமாகிறது. சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல அன்பு,நட்பு அனைத்தும் சேமித்து வைத்து கொள்ள வேண்டிய ஒன்றே. நம் சுற்றத்தார் தரும் சிறு சிறு அன்பையும் சேமித்து அதை விட பெரும் அன்பைத் தர வேண்டும். சிறு சிறு இனிய சொற்களே பெரிய சாதனையாளர்களை உருவாக்குகிறது, சிறு சிறு உயர்ந்த சிந்தனைகளே மாபெரும் சாதனையாளர்களை உருவாக்குகிறது.         சிறுதுளி பெருவெள்ளம் என்பது தனிமனித செயல்களில் இருந்து தொடங்குகிறது. சிறு பொருள் தானே என்று துச்சமாக நினைக்காமல், ஒரு சிறு உழி தானே பெரும் சிலையை உருவாக்குகிறது, ஒரு அச்சாணி தானே பெரிய தேரினை இழுக்கிறது என்பதை உணர வேண்டும்.          சிறு பதவியில் இருக்கும் போது நாம் செய்யும் தவறைத் திருத்தி நற்பண்புகளைச் சேமித்தால் பெரும் பதவியை அடையும் தகுதி தானாக அமையும்.         சிக்கனதின் சிறப்பை உணர்ந்தே அக்டோபர்31 ம் நாள் உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கை கவிதை

படம்
காணும் கனவெல்லாம் நிஜமாகி விட்டால் வாழ்க்கை ருசிக்காது வாழும் வாழ்க்கையெல்லாம் சந்தோஷமானால் இளமை ஜெயிக்காது உன்னை நீயே நம்பாவிட்டால் எதுவும் நடக்காது வானம் வரை யோசிப்போம் அன்பை தினமும் சுவாசிப்போம் சத்தியத்தை தினமும் நேசிப்போம் வாழ்க்கையில் நாளும் சாதிப்போம்.

My favourite lines about mother care

படம்
I never thank you enough for listening to me I never thank you enough for protecting me from the things I shouldn't do I never thank you enough for guiding me in the right direction I never thank you enough for putting up with my mood swings and arrogance I never thank you enough for without a doubt being there for me I never tell you enough how much I love you mum You mean the world to me , but I don't tell you enough But no matter what, i always will love you mum, No matter how much we argue, or how much you anger me, I'll love you till the day I die.

வாழ்க்கையும் முதுமையும்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு வாழ்க்கையை வாழ வேண்டும் மாற்றம் மட்டுமே மாறாதது கஷ்டமும் மாறும் நஷ்டமும் மாறும் இருப்பினும் மாற்றத்தை ஏற்க முடியாது ஏமாற்றத்தை தாங்க முடியாது வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் ஒரு பாடத்தைக் கற்றுத் தருவது வாழ்வின் இறுதிவரை - நாம் ஒரு புது பாடத்தைக் கற்கலாம் இது தான் வாழ்க்கை என்றுணரும் போது நாம் அடையும் நிலைமை முதுமை

படித்ததில் பிடித்தது(கவனமாய் இருங்கள்)

படம்
உங்கள் எண்ணங்களில்    கவனமாய் இருங்கள்                 அது உங்கள் வார்த்தைகளாக          வெளிப்படுபவை உங்கள் வார்த்தைகளில்         கவனமாய் இருங்கள்                  அது உங்கள் செயல்களாக         வெளிப்படுபவை உங்கள் செயல்களில்        கவனமாய் இருங்கள்               அது உங்கள் பழக்கமாக        மாறுபவை உங்கள் பழக்கங்களில்        கவனமாய் இருங்கள்             அது உங்கள் ஒழுக்கமாக       மாறுபவை உங்கள் ஒழுக்கத்தில்       கவனமாய் இருங்கள்               அது உங்கள் வாழ்க்கையை        மேம்படுத்துவது.

தர்மனுக்கு வந்த சோதனை

தர்மதேவன் கேட்ட கேள்விகள்: யட்சன்  : சூரியனை உதிக்க செய்வது                     யார்? தர்மன்  : பிரம்மா யட்சன்  : சூரியன் எதில் நிலைத்து நிற்கிறார்? தர்மன்  : சத்தியத்தில் யட்சன்  : ஒருவன் எதனால் சிறப்படைகிறான்? தர்மன்  : மன உறுதியால் யட்சன்  : உழவர்களுக்கு எது முக்கியம்? தர்மன்  : மழை யட்சன்  : விதைப்பதற்கு எது சிறந்தது? தர்மன்  : நல்ல விதை யட்சன்  : பூமியை விட பொறுமைமிக்கவர்? தர்மன்  : தாய் யட்சன்  : வானினும் உயர்ந்தவர் யார்? தர்மன்  : தந்தை யட்சன்  : காற்றினும் விரைந்து செல்லக் கூடியது? தர்மன்  : மனம் யட்சன்  : புல்லை விட அர்ப்பமானது ? தர்மன்  : கவலை யட்சன்  : ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்? தர்மன்  : மகன் யட்சன்  : ஒரு மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை? தர்மன்  : மனைவி யட்சன்  : ஒருவன் விட வேண்டியது? தர்மன்  : தற்பெருமை யட்சன்  : யார் உயிரற்றவன்?...

Education

"Education is the most powerful weapon we can use to change the world".                   -Nelson Mandela. "You educate a man;you educate a man ;you educate a woman;you educate a generation".   - Brigham Young.

அமைதியும் மகிழ்ச்சியும்

அமைதியும் மகிழ்ச்சியும் கன்பூசியஸ் அனைத்தையும் ஆராய்ந்து உணர்ந்ததனால் அறிவு முழுமை பெற்றது அறிவு முழுமை பெற்றதனால் சிந்தனை தூய்மையுற்றது சிந்தனை தூய்மையுற்றதனால் அறிவு நெறிப்படுத்தப்பட்டது அறிவு நெறிப்படுத்தப்பட்டதனால் ஆளுமை வளர்ச்சி உற்றது ஆளுமை வளர்ச்சி உற்றதனால் குடும்பம் நெறிப்பட்டது குடும்பம் நெறிப்பட்டதனால் மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டது மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டதனால் பேரரசு முழுமைக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் தவிழ்ந்து நிலவியது.

கந்தர்வன் கவிதைகள்

கந்தர்வன் கவிதைகள்: குடைகள்: வெண் கொற்றக் குடைநிழலில்                           ரோஜாச் செடிகள்                  வெயிலுக்குத் தவமிருக்க                            மானிடப் பயிர்கள்                             மழையில் நனைந்து ஒரு கறுப்புக் குடை வேண்டிக்                           கனவு காண்கின்றன. விடுகதை: இந்த தேசத்திலேயே மிகவும் உயர்ந்தவன் கிராம வாசியா நகர வாசியா இல்லை விலைவாசி. இல்லை: உழுபவனுக்கு நிலமில்லை உழைப்பவனுக்கு வேலையில்லை எங்கள் தேசத்தின் பரப்புக்கும் எல்லையே இல்லை. கொள்ளைகள்: என் வீட்டில் இன்று இருநூறு பவுன் நகை கொள்ளை போனது ஏது இவ்வளவு நகைகள்? எல்லாம் என் மனைவிக்கு மாமனார் போட்டவை. அவ்வாறெனில் இன்று நடந்தது மூன்றாவது கொள்ளை. ப...

கன்பூசியஸின் பொன்மொழிகள்

*நம்மைப் பிறர் அறிந்துணராத போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் இருப்போம்.அதுவே மேன்மையான மனிதனாக இருப்பதற்கு வழி. *உங்களிடம் தவறுகள் இருந்தால் நீங்களாகவே சீர்திருத்திக் கொள்ளத் தயங்காதீர்கள். *நற்குணம் கொண்டவனின் மனதில் சோகம் குடி புகாது. *புத்திசாலிக்கு சந்தேகங்களோ திகைப்போ ஏற்படாது. *உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள விரும்பாத எதையும் பிறருக்குச் செய்யாதீர்கள். அமைதி: *தன் குடும்பத்தில் அன்பு நிலையில் வாழ்பவனே,நாட்டு மக்களுக்கு அமைதியைப் பற்றிக் கூற தகுதி உடையவன்.

முயற்சி பொன்மொழிகள்5

முயற்சி: 1.முடியும் என நம்பு.முயற்சியைத் தொடங்கு.        -விவேகானந்தர். 2.பத்தாவது முறை கீழே விழுந்தவனைப் பார்த்து , பூமி முத்தமிட்டு சொன்னது ,நீ ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா.                               -கன்பூசியஸ். 3.எப்போதும் வீழ்ந்து விடாமல் இருப்பதில் ஆனந்தம் இல்லை. விழும் ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்பதில் தான் ஆனந்தம் உண்டு. -கன்பூசியஸ். 4.விழுந்தாலும் அருவியாய் விழுங்கள் எழுந்தாலும் இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள். 5.கனவு காணுங்கள் அந்த கனவு நனவாகும் வரை தீவிரமாக முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே.

விவேகானந்தரின் வைர வரிகள் 10

படம்
விவேகானந்தரின் வைர வரிகள்    1.நாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்ல ;சாதிக்க பிறந்தவர்கள்.     2.கவலைக்கு மருந்து கடின உழைப்பே.     3.உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை கைவிடாதே.      4.உனது இலக்கை அடையும் வரை ஓரிடத்திலும் தயங்கி நின்று விடாதே.      5.எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாக செய்யுங்கள். முழு அர்பணிப்பு உணர்வோடு செய்யுங்கள்.      6.சலிப்பில்லாத உழைப்பே சாதனைக்கு வழி.      7.உன்னால் இயன்றதை விட ஒரு படி நாளும் அதிகம் செய்து வா.      8.உனக்குள் எல்லா வலிமையும் இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும்.      9.நீ கருதுவதைச் செய்வதற்கு ஒரு போதும் தயங்காதே.உண்மையின் பாதையிலிருந்து ஒரு போதும் விலகாதே.      10.நீ எதை நினைக்கிறாயே அதுவாக ஆகிறாய்,உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

கல்வி மற்றும் ஒழுக்கம்

வாழ்க்கையில் சிகரத்தை அடைய கல்வி என்கின்ற படியில் ஏற வேண்டும் ஒழுக்கம் கல்வி என்கின்ற படியில் ஏற உதவும் வழிகாட்டி ஒழுக்கமாகும்.